யாழ். நல்லூர் வாள்வெட்டு சம்பவம் : பொலிஸார் தேடிய இளைஞன் குற்றத்தடுப்பு பிரிவில் சரண்

யாழ்.நல்லூர் அரசடி வீதியிலுள்ள கடை ஒன்றில் அட்டகாசம் செய்த வாள்வெட்டு குழுவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இளைஞன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

குறித்த இளைஞன் யாழ்.பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவில் நேற்று சரணடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் சுண்ணாகம் பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞனை பொலிஸார் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் இளைஞன் நேற்று சரணடைந்துள்ளார்.

சரணடைந்த இளைஞன் யாழ்.நல்லூர் அரசடி வீதியில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புபட்டதையும் சட்டவிரோத கும்பல் கூடியதையும் ஒப்புகொண்டுள்ளதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.நல்லூர் அரசடி வீதியிலுள்ள கடை ஒன்றில் பெற்றோல் குண்டு வீசியும், அங்கு நின்றிருந்த நபர்களையும் வெட்டி அட்டகாசம் புரிந்த கும்பல்களை யாழ்.பொலிஸார் தேடி வந்த நிலையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.