நண்பர்களுடன் சேர்ந்து மகளையே கற்பழித்த தந்தை: கொடூரர்கள் 4 பேர் கைது!

44 வயது கூலித்தொழிலாளி ஒருவர் 2 வருடமாக தான் பெற்ற 9 வயது மகளையே தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட தந்தை உட்பட 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலம் கொல்லம் அருகே விஜயன் என்ற கூலி தொழிலாளி 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். பின்னர் குடித்து விட்டு மனைவியையும் குழந்தைகளையும் அடித்து துண்புறுத்தியதால் அவர்கள் விஜயனிடம் இருந்து பிரிந்து சென்று விட்டனர்.

பின்னர் விஜயன் வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு விஜயனின் இரண்டாவது மனைவி இறந்து போக அவர் தனது மகளுடனும், தனது தாயுடனும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த இரண்டு வருடங்களாக விஜயன் தனது 9 வயது மகளை தன் நண்பர்கள் மூன்று பேருடன் தொடரந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார். அவர்களில் இரண்டு பேர் 40 வயதுக்கு மேல், ஒருவர் 21 வயது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர்கள் சிறுமியை பலாத்காரம் செய்வதை ஒருவர் பார்க்க அவர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.

உடனடியாக அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி தனக்கு நடந்த கொடுமையான அந்த சம்பவங்களை கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் அந்த சிறுமியின் தந்தை விஜயன் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட நான்கு பேரையும் கைது செய்துள்ளனர். தந்தையும் அவரது நண்பர்களும் 9 வயது சிறுமியை 2 வருடங்களாக பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.