விமர்சனங்களையும் குற்றச்சாட்டையும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும் ஜனாதிபதி

விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு வெற்றிகரமான வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டை வெற்றியை நோக்கி இட்டுச் செல்லப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்தில் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

மக்களுக்கு தேவையாக இருந்த முன்னேற்றத்தை பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புகளை செய்த அனைவருக்கும் ஜனாதிபதி இதன் போது நன்றி தெரிவித்து கொண்டார்.

எதிர்காலத்திலும் இவர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளுக்கு இடமளித்து நாட்டை வெற்றியை நோக்கி இட்டுச் செல்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடி மாத்திரமல்லாது சர்வதேச நிலைமைகளையும் கவனத்தில் கொண்டு சிறந்த வேகத்துடன் மற்றும் ஒழுக்கமான மெதுவான பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும்.

ஏற்படும் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொண்டு, மக்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தின் ஊடாக இணக்க அரசாங்கத்தின் பயணத்தை முன்னோக்கி கொண்டு செல்வதே தனது நோக்கம் எனவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.