யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வசந்தி தலைமையிலான நிர்வாகம் பல கோடிரூபா ஊழல் மோசடி

யாழ் பல்கலைக்கழகத்தில் வசந்தி அரசரத்தினம் தலைமையிலான நிர்வாகத்தில் 2013ம் ஆண்டில் பல கோடி ரூபா ஊழல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஒவ்வொரு துறையிலும் பெருவாரியான ஊழல்கள் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக  2016ம் ஆண்டு 7 மாதம் 15ம் திகதி வெளியாகியுள்ள  இலங்கை அரசாங்கத்தின் வர்த்தமாணியில் இது தொடர்பான முழு விபரங்களும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. யாழ் பல்கலைக்கழகத்தை சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு நிகராகக் கொண்டு வருவேன் என பதவி ஏற்ற தொடக்கத்தில் வசந்தி அரசரத்தினம் கூறியதற்கான விளக்கம் கடந்த 7ம் மாதம் 15ம் திகதிய வர்த்தமாணியில் 23ம் பக்கத்தில் இருந்து  விபரமாக வெளியாகியுள்ளது.