இடம்பெயர்ந்த மக்கள் நிர்க்கதிக்குள்ளாகி உள்ளனர்!

இடம்பெயர்ந்த மக்கள் நீர்பிரச்சினை காரணமாக நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே மேற்கண்டவாறு அவர் கூறினார்.

குறிப்பாக கிளிநொச்சி பூநகரி பிரதேசசெயலக பிரிவில் பாரிய நீர் தட்டுப்பாடு காணப்படுகின்ற நிலையில் அங்கு மக்கள் தங்களது அன்றாட அனைத்து நீர்த்தேவைகளுக்காகவும் பணம் கொடுத்தே நீரினை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், பூநகரி பிரதேச மக்கள் எதிர் கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்று கொடுக்க உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார்.

பூநகரி பிரதேச சபையினர் குடிநீர் விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் அது மக்களின் எல்லாத் தேவைகளுக்கும் போதுமானதாக இல்லை எனவும் கூறினார்.

மேலும், பூநகரி கிராம அபிவிருத்தி திட்டங்களின் ஊடாக இந்த பிரதேசத்திற்கு நீரைப் பெற்று கொடுக்க முடியும் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.