தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இதுவே தீர்வு! வடக்கு முதல்வர்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, கூட்டாட்சி முறையை அமுல்படுத்தினால் மாத்திரமே தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

தென் பகுதியிலுள்ள தீவிர போக்குடையவர்களின் கண்ணோட்டத்தில், தமிழ் மக்களின் பிரச்னைகளை அரசாங்கம் அணுகக் கூடாது.

இந்நிலையில், யுத்தக்குற்றச்சாட்டு விசாரணையில், சர்வதேச நீதிபதிகள் இடம்பெறாத எந்த அமைப்பும் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு ஏற்புடையதல்ல.

கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையிலான யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக ஏராளமான குற்றசாட்டுகள் எழுந்தன.

இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

எனினும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆலோசனையின்படி, உள்நாட்டு விசாரணைக் குழுவையே அரசாங்கம் அண்மையில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.