மற்றவர்களைக் குற்றஞ்சாட்டும் முன்னர் நம்மைப் பற்றிய முன்மாதிரி அவசியம்! சம்பந்தன்

மற்றவர்களைக் குற்றஞ்சாட்டும் முன்னர் நம்மைப் பற்றிய முன்மாதிரி அவசியம் என எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராசவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரானநம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறுதெரிவித்த அவர்,

மேலும் கூறுகையில்,

"புதிய அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நாட்டின் நிதி செயற்பாடுகளில் மாற்றம்ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. கடந்த அரசின் காலத்தில் இடம்பெற்ற பெரியசெலவுகள் தற்போது வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன.

இந்தநிலையில், பொதுநிதி தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். பொது நிதியை தனிப்பட்டவிடயங்களுக்காக பயன்படுத்தக்கூடாது. பொது நிதி மக்களுக்குச் சொந்தமானது.

அதனைஅவர்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும். இந்த விடயத்தை நாம் கருத்தில்கொள்ளவேண்டும்.இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள சில பெறுமதியானவிழுமியங்களை நாம் மதிக்கின்றோம்.

இருப்பினும் இதற்கு நாம் ஒத்துப்போகமுடியாது.நாம் ஒவ்வொருவரும் தூய்மையான முறையில் பொதுச் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். ஏனையோர்கள் மீது குற்றஞ்சாட்டுவதற்கு முன்னர் நாம் முன்மாதிரியானவர்களாக இருக்கின்றோமா எனப் பார்க்க வேண்டும்.

பொது நிதி தொடர்பான முழுப் பொறுப்பை நாடாளுமன்றம் ஏற்க வேண்டும். ஒவ்வொருசதமும் மக்களின் தேவைக்காக செலவிடப்பட வேண்டுமே தவிர தனிப்பட்ட தேவைக்காகசெலவிடப்படக்கூடாது.

பொது நிதி தொடர்பில் தமது கடமையைச் செய்வதற்குநாடாளுமன்றம் கடமைப்பட்டுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செல்லும் இடமெல்லாம் அவருக்கு மரியாதைகிடைக்கின்றது.

புதிய அரசின் கொள்கைகள் அணுகுமுறைகள், நாட்டில் சகல மக்களையும்ஒன்றாக இணைக்க ஜனாதிபதி எடுக்கும் முயற்சிகளாலேயே அவருக்கு சர்வதேசத்தில்அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்துசெயற்படவேண்டும். அதுவே எமக்குள்ள பொறுப்பாகும் என்றார்.