இதுதாங்க உலகத்திலேயே காஸ்ட்லியான ஸ்மார்ட் போன்: விலை எவ்வளவு தெரியுமா?

ஸ்மார்ட்கைப்பேசி வடிவமைப்பில் பல்வேறு நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றமை தெரிந்ததே.

இவற்றில் ஒவ்வொரு நிறுவனங்களும் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.

அவ்வாறே தற்போது Sirin எனப்படும் புதிய நிறுவனம் ஒன்றுமுதன் முறையாக ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை வடிவமைத்துள்ளது.

இது ஏனைய கைப்பேசிகளை விடவும் அதிகூடிய பாதுகாப்பு வசதியினை (Ultra Secure) கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிமைப்பதற்கு Sirin நிறுவனம் சுமார் 72 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்திருந்தது.

மேலும் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக் கைப்பேசிகள் செயற்படவுள்ளன.

அனேகமாக அடுத்த மாதமளவில் இப் புதிய கைப்பேசியானது அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன் விலையானது 20,000 அமெரிக்க டொலர்கள் வரை இருக்கும் என இணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இதன் ஏனைய சிறப்பம்சங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.