430 மில்லியன் ரூபா செலவில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் நிர்மாணிப்பு பணி

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் சுமார் 430 மில்லியன் ரூபா செலவில் அவசர சிகிச்சை பிரிவுடன் கூடிய நோயாளர் விடுதி ஒன்றினை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் மாவட்ட வைத்தியர்கள் எடுத்த தொடர் முயற்சியின் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடுதி அமைப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதையடுத்து அதற்கான அனுமதிகள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் மேற்படி கட்டடத்திற்கான நிதி கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் மருத்துவதுறை பல்வேறு பற்றாக்குறைகளுடன் தொடர்ந்தும் இயங்கி வருவதாக கூறப்படுகின்றது.