விஸ்வாசத்தில் இல்லாததா நான் எடுத்துவிட்டேன், முத்தையா கோபம்

முத்தையா படங்கள் என்றாலே தற்போது சர்ச்சைகளும் கூடவே வருகின்றது. இவர் இயக்கத்தில் வந்த தேவராட்டம் படம் கௌதம் கார்த்திக் திரைப்பயணத்தில் பெரிய வசூலை கொடுத்துள்ள படம்.

இப்படம் தென் தமிழகத்தில் மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது, இந்நிலையில் முத்தையா தொடர்ந்து தன் சாதி பெருமை குறித்தே படம் எடுக்கின்றார் என்ற பேச்சு இருந்துக்கொண்டே தான் உள்ளது.

அந்த வகையில் அவர் ஒரு பேட்டியில் ‘விஸ்வாசம் படமும் இதே பின்புலம் தான், அந்த படத்தில் என் படத்தை விட அதிகம் இது போன்ற காட்சிகள் உள்ளது.

ஆனால், நான் தான் டார்கெட் செய்யப்படுகின்றேன்’ என்று முத்தையா கூறியுள்ளார்.