யாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி!! மழையில் நடந்த சோகம்!!

குப்பிளான், மயிலங்காடு மின்னல் தாக்கத்தால் இரண்டு பெண்கள் உள்பட மூவர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போதே இந்த இடர் இடம்பெற்றது என்றும் பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில இடங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்துவரும் நிலையில்
சுன்னாகம் குப்பிளான், மயிலங்காடு பகுதியில் இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.