தேசிய சுகாதார நல கண்காட்சி யாழில் ஆரம்பம்!

தேசிய சுகாதார நல கண்காட்சி யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த கண்காட்சி ஆரம்பிக்கப்பட்ட இந்த கண்காட்சி, நாளை மற்றும் நாளை மறுதினமும் தொடர்ந்து காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சுகாதார மற்றும் சுதேசிய இராஜாங்க அமைச்சர் பைசர் ஹாசிம் கலந்துகொண்டு கண்காட்சியை நாடாவெட்டி திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து கண்காட்சியையும் அமைச்சர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.

இதன்போது யாழ் மாநகர முதல்வர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் உள்ளிட்ட சுகாதார திணைக்கள அதிகாரிகள், சுகாதார வைத்திய சேவை நிறுவங்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.