யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியால் நேர்ந்த விபத்து!

கிளிநொச்சி - இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி, வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்கராயன் பகுதியை சேர்ந்த 66 வயதுடைய சந்தியாபிள்ளை பீற்றர் இமானுவேல் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.