சம்பந்தனுக்கு ரணில் கொடுத்த சலுகை?

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அரசாங்கம் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அந்த கட்சியில் தலைமையகத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய அதன் உறுப்பினர் ராஜு பாஸ்கரன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம், நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால், நாடாளுமன்றத்தில் கடந்த ஐந்தாம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், வரவு செலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீது வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்ட நிலையில், அது 43 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 11 பேர் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள். இது குறித்து பல்வேறு தரப்பினர்களும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே, இரா.சம்பந்தனுக்கு அரசாங்கம் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ராஜு பாஸ்கரன் குற்றம் சுமத்தியுள்ளார்.