கோயில்களில் இந்த கோபுர தரிசனம் கோடி புண்ணியம்?

கலை கலாசாரம் நாகரீகம் அநாகரீகம் என பல சொற்கள் தமிழில் உள்ளன உடையில் நாகரீகம் என சிலர் அநாகரீகமாக நடப்பதும் கண்கூடு.

மேலும், கிளிந்த கால்சட்டை சட்டைகளை அணிந்து அதை நாகரீகமாக கருதும் பெண்களும் நம்மத்தியில் இல்லாமல் இல்லை. அப்படியும் சில பெண்கள் நாம் பூமியில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

சேலைகட்டும் மாந்தர்கள் தமது சேலை மேல்சட்டைக்கு ஜன்னல் கம்பி போல் பலவிதமாக அலங்கரிப்பதும் சேலைகளில் தற்போது ஆன்மீக விக்கிரங்களை பதிவிட்டு அதை அலங்கராமாக எண்ணுவதும் தற்போது மலிந்துவிட்டது.

இதையும் மீறி கோபுரதரிசனம் கோடி புண்ணியம் என கோயில் கோபுரத்தை வணங்கும் இந்துமத மக்கள் சேலை சட்டைகளை பார்த்து கோபுர தரிசனம் செய்யும் அநாகரீகம் நாகரீகமாக இருக்கிறது.

இந்நிலையில் இனி கடவுள் உருவங்களும் பெண்களின் முதுகை மறைத்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை அல்லவா?