கிளிநொச்சியில் டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் கிளநொச்சியின் பல பிரதேசங்களிலும் டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நகரின் வர்த்தக நிலையங்கள் அதனோடு இணைந்த குடியிருப்புக்கள் என்பவற்றில் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் கள பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.