வடக்கின் அடுத்த முதலமைச்சர் பதவிக்கு டக்ளஸ் போட்டி...

வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுவது தொடர்பில் ஆலோசனை செய்து வருவதாக ஈ.பி.டி.பி இன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாத் 25ஆம் திகதியுடன் வடமாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவுக்குவரும் நிலையில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் தற்போது விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்தநிலையில், வடக்கு மாகாணசபைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவது பற்றி தாம் ஆலோசித்து வருவதாக டக்ளஸ் தேவானந்தா கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகளின் ஊடாக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று நான் நம்புகிறேன், எனவே, எனது கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக ஏன் நான் போட்டியிடக் கூடாது என்றும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.