வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தமிழரசுக் கட்சிக்கு தாவுகின்றார்??

ஈ.பி.டி.பி கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவருமாக சி.தவராசா, தமிழரசுக் கட்சிக்கு தாவுவதற்கு ஆயத்தமாகின்றார் என தவராசாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  ஈ.பி.டி.பியின் பொறுப்பாளர் டக்ளஸ்தேவானந்தாவுடன் தவராசா அண்மையில் கடுமையாக முரண்பட்டுக் கொண்டதும் அதனையடுத்து தவராசாவை டக்ளஸ் தனது கட்சியில் இருந்து நீக்கவும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து அகற்றவும் நடவடிக்கை எடுத்தது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

இவ்வாறான நிலையில் தவராசா தமிழரசுக் கட்சிக்கு தாவுவதற்கு முடிவெடுத்துள்ளதாகவும்  தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகர் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து தமிழரசுக் கட்சியின் உயர் மட்டங்களுடன் கலந்தாலோசிப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இலங்கையில் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்கள் தொகுதிவாரியான தேர்தல்களாக இருக்கும் என்பதையும் இதனால் ஈ.பி.டி.பி கட்சி உட்பட பல கட்சிகள் வாழ்நாளில் தேர்தல்களில் வெற்ற பெறுவற்கு வாய்ப்புகள் இல்லாது போகும என்பதையும்  தவராசா உணர்ந்து இந்தக் கட்சித் தாவல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என அவரது நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.