சங்கக்காரா கைகொடுக்க மிரட்டல் வெற்றி பெற்ற டாக்கா அணி...

வங்கதேச பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா ஆடும் டாக்கா டைனமிட்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று நடந்த 2வது லீக் ஆட்டத்தில் பரிசல் புல்ஸ்- டாக்கா டைனமிட்ஸ் அணிகள் மோதியது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பரிசல் புல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 148 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் முஸ்பிகுர் ரஹிம் (50), நபீஸ் (55) அரைசதம் அடித்தனர்.

இதன் பின்னர் 149 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய டாக்கா அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய மெஹடி மரூஃப், சங்கக்காரா சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

சங்கக்காரா 30 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்களும் கைகொடுக்க டாக்கா அணி 16 ஓவரிலே 2 விக்கெடுக்கு 149 ஓட்டங்கள் பெற்று 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மெஹடி மரூஃப் 45 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சர் என 75 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவர் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.