எல்லோரையும் பிரிச்சு காமிக்கின்றேன்: பிக்பாஸ் வைஷ்ணவியின் சவால் வீடியோ

ஷ்ணவி, சீக்ரெட் அறையில் இருந்தபோது தன்னை பற்றி சக போட்டியாளர்கள் புறம் பேசியதால் மனம் நொந்துள்ளார்.

வைஷ்ணவியின் மன வருத்தம் இன்று உடைந்து வெளியேறியுள்ளது. இந்த வீட்டில் யாரும் 100% உண்மையாக இல்லை என்றும், என்னை இங்கு மட்டந்தட்டிய மாதிரி என் வாழ்க்கையில் யாருமே என்னை மட்டந்தட்டியது இல்லை என்றும் மும்தாஜ், பாலாஜியிடம் அழுதுகொண்டே கூறுகிறார் வைஷ்ணவி

அதன்பின்னர் இங்குள்ள ஒவ்வொருவரையும் ஆட்டை பிரிக்கின்ற மாதிரி, மாட்டை பிரிக்கின்ற மாதிரி பிரித்து காண்பிக்கின்றேன் என்றும், அந்த திறமை தன்னிடம் இருப்பதாகவும் சவால் விடுகிறார். அவருடைய ஆவேசத்தை பார்த்து பாலாஜியும் மும்தாஜூம் அதிர்ச்சி அடைகின்றனர்.