திருடர்கள் தொடர்ந்து கைவரிசை - யாழ் கல்வியங்காடு பகுதியில் பதற்றம்!! (Photos)

கல்வியங்காடு புதியசெம்மணி வீதியில் இன்று (08-08-2018) புதன்கிழமை ஒரு வாரத்தில் மூன்றாம் முறையாக திருடர்கள் தொடர்ந்து தமது கைவரிசையை காட்டியுள்ளனர்.

வீட்டின் பின் கதவு சீவப்பட்டு  உடைக்கப்பட்டு திருட்டுச்சம்பவம்  இடம்பெற்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர் சியாந்தன் தர்சிகா கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த  சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது.

வீட்டின் உரிமையாளர் காலை வீட்டைப்பூட்டி விட்டு  வேலைக்கு சென்று மாலை வீடு  திரும்பியிருந்த வேளை  வீட்டின் பின்கதவு சீவப்பட்டு மர்ம முறையில் உடைக்கப்பட்டு இருந்ததைக்கண்டு அயலவருக்கு தெரி யபடுத்தியதோடு கோப்பாய் பொலிஸாருக்கும்  முறைப்பாடு செய்திருந்தார்.  

சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் திருட்டு சம்பவம்  தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருந்த வேளை வீட்டிலிருந்த அலுவலக வறைப்பட்டிகை (tab )  திருடப்பட்டது தெரியவந்துள்ளது.

அத்தோடு குறித்த வீதியில் அமைந்துள்ள  சிவானந்தம் நிருஷா, யோகநாதன் பூசனா தேவி , சியாந்தன் தர்சிகா ஆகியோர்  வீட்டின் மீது  ஒருவாரத்தில்  தொடர்ச்சியாக மூன்று முறை திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

- தங்கராசா ஷாமிலன்.