காமெடி பேயாகும் மல்லுவுட் ஹீரோயின்

திகில், சஸ்பென்ஸ் என பயமுறுத்தும் விதங்களில் பேய் படங்கள் உருவாகி வருகிறது. அடுத்து, ‘பேய் எல்லாம் பாவம்’ பெயரில் நகைச்சுவை பேய் படம் உருவாகிறது. இதுபற்றி இயக்குனர் தீபக் நாராயணன் கூறும்போது,’பேய் என்றதும் வெள்ளை துணி போட்டிருக்கும், இருட்டில் நடமாடும் என்றுதான் காட்டப்பட்டிருக்கிறது. இப்படத்தை பொறுத்தவரை பேய் ஆம்லட் போடுவது, தண்ணியடிப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

புதுமுகம் அரசு ஹீரோ. கேரள நடிகை டோனா சங்கர் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அப்புகுட்டி, ஸ்ரீஜித்ரவி, தர்ஷன், சிவகுமார், ரசூல் ஆகியோரும் நடிக்கின்றனர். பிரசாந்த் ஒளிப்பதிவு.  ஹனிஸிபாய் தயாரிப்பு. கதை, வசனம் தவமணி பாலகிருஷ்ணன்’ என்றார்.