கருணாநிதி மறைவு எதிரொலி: 'பியார் பிரேமா காதல்' ரிலீஸ் தேதி மாற்றம்

திமுக தலைவர் கருணாநிதி கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களை தவிக்கவிட்டு நேற்று காலமானார். அவருடைய இறுதிச்சடங்கு இன்று முழு அரசு மரியாதையுடன் நடந்தது.

இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு காரணமாக நேற்று மாலை முதல் திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் நாளை வெளியாகவிருந்த ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா நடித்த 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தேதியில்தான் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஹரிஷ் கல்யாண், ரைசா, ரேகா, ஆனந்த்பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து தயாரித்துள்ளார். இளன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவும், மணிகுமரன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.