கருணாநிதிக்கு விஜய் மனைவி சங்கீதா அஞ்சலி

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் சில பிரமுகர்கள் வெளிநாட்டிலும் வெளி மாநிலங்களிலும் உள்ளனர். டெல்லியில் இருந்த கமல்ஹாசன் அவசர அவசரமாக சென்னை வந்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டார்.

ஆனால் அமெரிக்காவில் படப்பிடிப்பில் உள்ள விஜய்யால் சென்னை வரமுடியவில்லை. அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு பயணம் செய்ய 18 மணி நேரம் ஆகும். ஆனால் அதற்குள் கருணாநிதியின் இறுதிச்சடங்கு முடிந்துவிடும் என்பதால் அவர் சென்னை திரும்ப வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் விஜய்யின் மனைவி சங்கீதா ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு மரியாதை செலுத்தினார். அவருடன் விஜய் மன்ற நிர்வாகிகளும் இருந்தனர். 'சர்கார் ' படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியதும் விஜய், கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துவார் என விஜய் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.