சம்பூரில் மோட்டார் குண்டுகள்

இலங்கையின் கிழக்கு மாகாணம், திருகோணமலை சம்பூர் முருகன் ஆலயத்திற்கு அருகிலுள்ள கிணறொன்றிலிருந்து 60 மில்லிமீற்றர் வகையைச் சேர்ந்த 44 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.

கிணறு அமைந்துள்ள காணி சுமார் 9 வருடங்களாக கடற்படையினரின் வசமிருந்த நிலையில், கடந்த மாதம் 25 ஆம் திகதி காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட காணியினை உரிமையாளர்கள் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபடும் போது, அந்த மோட்டார் ரவைகள் கண்டெடுக்கப்படடுள்ளன.

இதுகுறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து, பொலிஸார், மற்றும் கடற்படையினர் இந்த ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.