யாழில் பரபரப்பு! விஜயகலாவிற்கு எதிராக மர்மநபர்கள் தெரு தெருவாய் செய்த காரியம்..

விஜயகலா மகேஸ்வரனிற்கு அவதூறு ஏற்படுத்தும் விதமாக மர்மநபர்கள் யாழில் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். வித்தியா கொலைக் குற்றவாளியைக் காப்பாற்றிய குற்றவாளி, தனது அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவர், இவருக்கு எம்.பி பதவி எதற்கு? என்ற வாசகங்களை உள்ளடக்கிய இந்த சுவரொட்டிகள் யாழ் நகரில் ஒருசில இடங்களில் மர்மநபர்களால் ஒட்டப்பட்டுள்ளது.

இன்று காலை குறித்த சுவரொட்டிகள் யாழ் நகரப்பகுதியின் ஒருசில இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதுடன் இந்த சுவரொட்டியை வெளியிட்டவர்கள் நாளைய தலைமுறை என குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜயகலா மகேஸ்வரனிற்கு எதிரான தரப்பு இந்த சுவரொட்டியை ஒட்டியிருக்லாமென நம்பப்படுகிறது.