ஈழத்து கலைஞர் பாஸ்கியின் செல்பி 'அக்கம்-பக்கம்'

தற்போது மக்களின் பொழுதுபோக்கு அம்சங்கள் எத்தனையோ இருந்தாலும் அவற்றில் முக்கிய பங்காற்றுவது சினிமா. ஆனால் இந்த சினிமாவின் முன்னோடி என்றால் அது நாடகங்கள் தான்.தமிழ் சினிமாவின் பல ஜாம்பவான்கள் உருவானதே மேடை நாடகங்கள் மூலமாகத் தான்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாடகங்கள் மீதான ஆர்வம் மக்களிடம் பெருமளவு குறைந்து விட்டது. ஒரு சில கலைஞர்களே நாடகங்களுக்கு பங்காற்றி வருகின்றனர். அந்த வகையில் ஈழத்து மக்களை தனது குறும்படங்கள் வாயிலாக மகிழ்வித்து வருகிறார் பாஸ்கி. அதில் ஒன்றே தற்போது நீங்கள் காணும் காணொளி....

நாமும் இம்மாதிரியான மனிதர்களை அதிகமாகவே சந்தித்திருப்போம். சுற்றி வளைத்து இப்படி கேட்கும் கேள்வி மற்றவர் மனதை புண்படுத்தும் என்பதைக் கூட பொருட்படுத்தாத மனிதர்களுக்கு சரியான பாடமாக அமையும் இக்காட்சி.