சூர்யாவுக்காகப் பாடல்களை முன்கூட்டியே தயார் செய்த ஜீ.வி.பிரகாஷ்

சூர்யாவின் 38வது படத்துக்காகப் பாடல்களை முன்கூட்டியே தயார் செய்து வருகிறார் ஜீ.வி.பிரகாஷ். 

செல்வராகவன் இயக்கத்தில் தன்னுடைய 36வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் சூர்யா. ‘என்.ஜி.கே.’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி இருவரும் ஹீரோயினாக நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

இதன்பிறகு சூர்யாவின் 37வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறார். சென்னை, டெல்லி, ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் இதன் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. மோகன்லால் மற்றும் அல்லு சிரிஷ் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

  surya

இதற்கடுத்ததாக, சூர்யாவின் 38வது படத்தை ‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கரா இயக்குகிறார். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமே இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ஜீ.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்தப் படத்துக்காக இப்போதே பாடல்களைத் தயார்செய்து வருகிறார் ஜீ.வி.பிரகாஷ்.