கமல் ஜோடியாக நடிக்கவில்லை – கீர்த்தி சுரேஷ்

‘கமல் ஜோடியாக தான் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை’ என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

‘நடிகையர் திலகம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நேற்று காலை திருப்பதிக்குச் சென்று ஏழுமலையான் சாமியைத் தரிசனம் செய்தார் கீர்த்தி சுரேஷ். அவரைக் கோயிலில் பார்த்த ரசிகர்கள், மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

தரிசனத்துக்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “நீண்ட நாட்களாக இங்கு வந்து தரிசனம் செய்ய வேண்டும் என நினைத்தேன். ஆனால், சில காரணங்களால் அது முடியவில்லை. தற்போது இங்கு வந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘நடிகையர் திலகம்’ வெற்றியால்தான் நான் இங்கு வந்தேன்.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நான் நடிக்கவில்லை. அதுமட்டுமல்ல, வேறெந்த வாழ்க்கை வரலாற்றுப் படத்திலும் நான் நடிக்கவில்லை. ‘நடிகையர் திலகம்’ படத்துக்கு கிடைத்த பாராட்டைப் பார்த்து கமல் சார் நேரில் அழைத்து தன்னுடைய பாராட்டைத் தெரிவித்தார். அவருக்கு ஜோடியாக நான் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை எனத் தெரிவித்தார்.