ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் களமிறங்குகிறாரா? அது படத்தின் போஸ்டராம்!

ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் களமிறங்குகிறார் என்ற சுவர் விளம்பரத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக நிலையில் அதுகுறித்த தகவல் கிடைத்துள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் களமிறங்க போவதாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. அதன் புகைப்படம் சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலானது. ஆனால் இதுகுறித்து தற்போது வரை ஆர்.ஜே.பாலாஜி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் இந்த சுவர் விளம்பரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஒரு ரீமேக் படத்தில் அரசியல்வாதியாக நடிக்க உள்ளாராம். மேலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள மே18ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.