கிளிநொச்சி பாடசாலையுடன் ஒப்பந்தம் செய்த தென்கொரியா

தென்கொரியாவின் கொய்கா சர்வதேச அபிவிருத்தி செயல்திட்டத்தின் மூலம் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கல்வி அமைச்சிற்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது.

இதற்கான கைசாத்து கல்வி அமைச்சில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் முன்னிலையில் கல்வி அமைச்சின் செயலாளர் சுணில் ஹெட்டியாராச்சிக்கும் தென்கொரியாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி வீடொங்கூ தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் பனிப்பாளர் நாயகம் ஏ.எம்.பி ரத்நாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள் பனிப்பாளர்கள் உட்பட தென்கொரிய நாட்டின் கொய்கா நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.