யாழ்ப்பாணத்தில் மலசலகூடத்துக்குள் இருந்த நாக பாம்பு இளைஞன் மீது பாய்ந்து கொத்தியது!!

யாழ். தென்மராட்சி வரணிப் பகுதியில் நாகபாம்பு தீண்டியதில் பாதிக்கப்பட்ட இளைஞனொருவன் யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று(14) பகல் குளிப்பதற்காக வீட்டுக் குளியலறைக்குள் சென்ற போது அங்கு ஏற்கனவே நின்றிருந்த நாகபாம்பு சற்றும் எதிர்பாராதவிதமாக இளைஞனின் காலில் தீண்டியுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞன் யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேயிடத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஜனகவர்மன் என்பவரே நாகபாம்பின் தீண்டுதலுக்குள்ளாகிச் சிகிச்சை பெற்று வருபவராவார்.