யாழில் பட்டபகலில் அரங்கேறிய சம்பவம்...அதிர்ச்சியில் மக்கள்

சாவகச்சேரி கிராம்பு பகுதியில் , பட்டபகலில் இருவர் வர்த்தக நிலையத்தில் 12000 ரூபாய் பணத்தினை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

வர்த்தக நிலையமொன்றிற்கு, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தம்மை புலனாய்வாளர்கள் என அறிமுகப்படுத்தியதோடு, வியாபார நிலையத்தினைச் சோதனையிட்டனர்.

பின்னர் வெளியில் செல்ல ஆயத்தமான வேளையில், பெண்ணொருவரிடம் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுக்க முற்பட்டனர். குறித்த பெண் கூக்குரல் எழுப்பிய போது அவ்விருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் சந்தேகம் கொண்ட வர்த்தக நிலைய உரிமையாளர் அவரது மேசையிலிருந்து 12000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை அறிந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.