யாழ் போக்குவரத்து பஸ் சாரதி மீது கடும் தாக்குதல்!!

இலங்கை போக்குவரத்து சபை சாரதி ஒருவரை தனியார் போக்கு வரத்து ஊழியர்கள் சிலர்தாக்கியதில் குறித்த சாரதி படுகாயமடை ந்த நிலையில் நேற்று யாழ்.போதனா வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் கோண்டாவிலை சேர்ந்த பூபாலசிங்கம் கிருஸ்ணபாலன் (வயது 37) என்ற சாரதியே படுகாயமடைந்தவராவார்.

பலாலி வீதி வழியாக சேவை மேற்கொள் ளும் 764 ஆம் இலக்க  பேருந்தில் குறித்த நபர்  நேற்று மாலை 6.20 சேவையை முடித்து திரும்பியுள்ளார். அப்போது  புன்னாலைக்கட்டு வன் வடக்கு சந்தியில் வந்த தனியார் பேரு ந்து சேவை ஊழியர்கள் சிலர் குறித்த பேரு ந்தை மறித்து சாரதியை கீழே இறக்கி சரமா ரியாக தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.

உதட்டில் பாரிய காயம் அடைந்த குறித்த சாரதி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இச் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு பதிவு செய் ததுடன், யாழ்.போதனா வைத்தியசாலை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.