ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த தீபிகா படுகோனே

நடிகை தீபிகா படுகோனே விருது வழங்கும் விழாவில் அணிந்து வந்த உடை பார்த்து ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழச்சியில் தீபிகா படுகோனேவுக்கு சிறந்த என்டர்டெய்னர் விருது கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தீபிகா அணிந்து வந்த வெள்ளை நிற கவுனை பார்த்து அங்கிருந்த பிரபலங்கள், ரசிகர்கள் முகம் சுளித்தனார்.

இவர் ஏற்கனவே 2017-ஆம் ஆண்டில் வின் டீசலுடன் நடித்த ஆங்கில படத்தின் ப்ரோமோஷன் நிகழச்சியில் பங்கேற்பதற்காக இதே போன்ற உடை அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.