மலையாளப் படத்தில் நடிக்கும் கணேஷ் வெங்கட்ராம்

‘பிக் பாஸ்’ புகழ் கணேஷ் வெங்கட்ராம், மலையாளப் படத்தில் நடித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கணேஷ் வெங்கட்ராம். இவர், ‘மை ஸ்டோரி’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். ரோஷ்னி தினகர் இயக்கிவரும் இந்தப் படத்தில், பிருத்விராஜ் மற்றும் பார்வதி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில், பார்வதிக்கு ஜோடியாக நடித்துள்ளார் கணேஷ் வெங்கட்ராம். இந்தப் படத்தின் ஷூட்டிங் போர்ச்சுகல், மைசூர் மற்றும் ஜார்ஜியாவில் நடைபெற்றுள்ளது. தன்னுடைய போர்ஷனை முடித்துக் கொடுத்துள்ளார் கணேஷ் வெங்கட்ராம்.