சல்மான் கானை இயக்கும் பிரபுதேவா

சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படம் இயக்குகிறார் பிரபுதேவா. 

பிரபுதேவா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘சிங் ஈஸ் பிளிங்’. ஹிந்திப் படமான இது, 2015ஆம் ஆண்டு ரிலீஸானது. அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய பிரபுதேவா, மறுபடியும் இயக்குநர் நாற்காலியில் அமர இருக்கிறார். 

பாலிவுட்டில் ஹிட்டான ‘தபாங்’ படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க இருக்கிறார் பிரபுதேவா. சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கும் இந்தப் படத்தை, அர்பாஸ் கான் தயாரிக்கிறார். அடுத்த வருடம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. 

பிரபுதேவா நடிப்பில் ‘மெர்குரி’, ‘யங் மங் சங்’, ‘லக்‌ஷ்மி’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன. ‘சார்லி சாப்ளின் 2’, ‘ஊமை விழிகள்’  ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் பிரபுதேவா.