அதர்வா படத்தில் இந்துஜா

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ’பூமராங்’படத்தில் மேயாத மான் படத்தில் வைபவுக்கு தங்கச்சியாக நடித்த இந்துஜா நடிக்கவுள்ளார்.

அதர்வா  தற்போது நடித்து வரும்‘செம போத ஆகாத’, ‘ருக்குமணி வண்டி வருது’, ‘இமைக்கா நொடிகள்’, ‘ஒத்தைக்கு ஒத்த’,படங்களை தொடர்ந்து ஆர்.கண்ணன்  இயக்கி வரும் பூம்ராங் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். 

சமுதாய கருத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார், ரதன் இசையமைக்கிறார், மேலும், இந்த படத்தை மசாலா பிக்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் ஆர்.கண்ணன் தயாரிக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்தில்  மேயாத மான் படத்தில் வைபவுக்கு தங்கச்சியாக நடித்த இந்துஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.