யாழில் பெண்களை வலைக்குள் வீழ்த்தி அனுபவிக்க முயலும் காப்புறுதி நிறுவன உயரதிகாரி!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற  காப்புறுதி நிறுவனத்தில் பணிபரியும் பெண் ஊழியர் ஒருவர்

அதே நிறுவனத்தில் உயரதிகாரியாக உள்ள ஆண் ஒருவரின் அச்சுறுத்தல் காரணமாக (Black Mail) நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது –

குறித்த நிறுவனத்தில் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர் ஒருவரை அதே நிறுவனத்தில் பணிபரியும் அதிகாரி ஒருவர் குறித்த பெண் வேறொருவருடன் உரையாடிய சம்பவம் ஒன்றை பதிவுசெய்து வைத்திருந்ததாகவும் அதனை வைத்துக்கொண்டு குறித்த பெண்ணிடம் தகாத முறையில் அணுகி அப்பெண்ணை துன்புறுத்தியதாகவும் இதனால் மனமுடைந்துபோன குறித்த பெண் ஊழியர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார் என்றும் தெரியவருகின்றது.

குறித்த காப்புறுதி நிறுவனத்தில் பணிபுரியும் உயரதிகாரிகள் பலர் இவ்வாறான பல சம்பவங்களை மேற்கொண்டு வந்துள்ளதால் இங்கு பணியாற்றிய பெண்கள் மட்டுமல்லாது அங்கு வாடிக்கையாளர்களாக உள்ள பல பெண்களும் பெரும் துன்பங்களை அனுபவித்து வந்த சம்பவங்களும் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

 ஆனாலும் அந்த நிறுவன அதிகாரிகள் தமது அதிகாரத்தால் அவற்றை மூடிமறைத்து வந்திருக்கின்றனர்.

அதுபோலவே இந்த சம்பவமும் திட்டமிட்ட வகையில் குறித்த ஆண் அதிகாரியால் அரங்கேற்றப்பட்டுள்ளதுடன் அப்பெண்ணை தனது பிரத்தியேக அந்தரங்க தேவைக்காக பயன்படுத்துவதற்காகவே மிரட்டியுள்ளார் என தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்து கலாசாரத்தை மட்டுமல்ல யாழ்ப்பாணத்து மக்களையும் நிர்வாணமாக பார்ப்பதற்காகவே இந்த காப்புறுதி நிறுவனங்கள் இயங்குகின்றன. ஆனாலும் எமது மக்களும் அந்த கொள்ளையர்களை நம்பி தமது பணங்களை இறைத்துவருவது மட்டுமல்லாது தமது கௌரவங்களை மட்டுமல்லாது குடும்ப மானங்களையும் பத்திரிகை செய்தியாக்கி வருவது வேதனையானது. மக்களே இது உங்கள் கவனத்திற்கு!

(குறிப்பு: – குறித்த நிறுவனத்தின் பிராந்திய பொறுப்பாளர் மற்றும் இதர பல அதிகாரிகளின் கீழ்த்தனமான தகவல்கள் அடங்கிய திரட்டுக்கள் பல எம்மிடம் பாதிக்கப்பட்ட தரப்புகளால் வழங்கப்பட்டுள்ளன. அவை விரைவில் மக்கள் மத்தியில் வெளிடப்படும்)