தனுஷ் நடித்த ஹாலிவுட் படத்தின் டீசர் வெளியீடு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் பன்முக திறமை கொண்டவர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் படத்தின் மேக்கிங் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பஃகீர் (The Extraordinary Journey of the Fakir)என்ற  ஹாலிவுட் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. அப்படத்தின் தயாரிப்பில் ஏற்பட்ட கால தாமதத்தால், அப்படத்தை இயக்க இருந்த டைரக்டர்  படத்திலிருந்து விலகினார். இதனால் அப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது இந்த சிக்கல்கள் தீர்ந்த நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

ஹாலிவுட் டைரக்டர் கென் ஸ்காட் இயக்கியுள்ள இப்படத்தில் பெர்னிஸ் பேஜா, பர்காட் அப்டி, எரின் மொரியார்ட்டி, அபெல் ஜாப்ரி போன்ற ஹாலிவுட் நடிகர்கள்  நடித்துள்ளனர்.

L'Extraordinaire Voyage du Fakir - Featurette Ken Scott