யாழ் மக்களே அவதானம்!! நீங்களும் ஏமாற்றப்படலாம்!! இதோ விபரங்கள்!!

புனர்­வாழ்வு அமைச்­சி­லி­ருந்து கதைக்­கின்­றோம் என அலை­பே­சி­யில் கதைக்­கும்நபர்­கள், பொது­மக்­களை ஏமாற்­றிப் பணத்தை ‘ஈசி காஷ்’ (இலகு பணம்) மூலம் பெற்று வரு­கின்­ற­னர் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

இத்தகைய சம்­ப­வங்கள் தென்­ம­ராட்சி பிர­தே­சத்­தில் கடந்த ஒரு வார­மாக தொடர்ந்து இடம்­பெற்று வரு­கின்­றன. கடந்த 2000ஆம் ஆண்டு இடம்­பெற்ற போர் அனர்த்­தம் கார­ண­மாக சொத்­துக்­களை இழந்­த­வர்­கள் இழப்­பீடு கோரி புனர்­வாழ்வு அமைச்­சுக்கு விண் ணப்­பித்து 15 வரு­டங்­க­ளா­கின்­றன. எனி­னும் இது­வரை பிர­தே­சத்­தைச் சேர்ந்த பல­ருக்கு இழப்­பீட்­டுக் கொடுப்­ப­னவு கிடைக்­க­வில்­லை.

இந்­த­நி­லை­யில் அதனைச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்தி இது­வரை கொடுப்­ப­னவு கிடைக்­கா­த­வர்­க­ளுக்கு அலை­பே­சி­யில் தொடர்பை ஏற்­ப­டுத்­தும் சில விஷ­மி­கள் தாம், ‘‘கொழும்பு புனர்­வாழ்வு அதி­கார சபை­யி­லி­ருந்து கதைக்­கின்­றோம்.

தங்­க­ளுக்கான இழப்­பீட்­டுத் தொகை வழங்­கப்­ப­ட­வுள்­ளது. மேல­திக விவ­ரங்­களை வேறொரு அலு­வ­ல­ரு­டன் கதை­யுங்­கள்’ எனக் கூறி மற்­றொரு அலை­பேசி இலக்­கத்தை வழங்குகின்றனர்.

மக்கள் அந்த இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு கதைத்­துள்­ள­னர். அதன்­போது, ‘‘இழப்­பீட்­டுக்­கான காசோலை தயா­ராக உள்­ளது. விரை­வில் அனுப்­பு­வ­தா­யின் குறித்த இலக்­கத்­துக்கு 19 ஆயி­ரத்து 500 ரூபா ஈசி காஷ் மூலம் அனுப்பி வைக்க வேண்­டும். பணம் கிடைத்­த­தும் தங்­க­ளது இழப்­பீட்­டுக் கொடுப்­ப­னவு தங்­க­ளது முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கப்­ப­டும்’ என குறித்த இலக்கமுடைய நபர் கூறி­யுள்­ளார்.

அதன் பிர­கா­ரம் காசு அனுப்­பப்­பட்­டுள்­ளது. அனுப்பி ஒரு வாரத்­துக்கு மேலா­கி­யும் இழப்­பீட்­டுக் கொடுப்­ப­னவு கிடைக்­கா­த­தால் மீண்­டும் குறித்த நப­ரு­டன் தொடர்பு கொண்­ட­போது அலை­பேசி இணைப்பு துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

போர் இடரின்  போது பிர­தே­சத்­தைச் சேர்ந்த அரச பணி­யா­ளர்­கள், ஓய்­வூ­தி­யர்­கள், வணி­கர்­கள், வெளி­நாட்­டில் வதி­வோ­ரின் குடும்­பங்­கள், வாக­னங்­கள் வைத்­தி­ருந்­தோர்

என ‘உ’ பங்­கீட்டு வைத்­தி­ருந்த 5 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்­ட­வர்­கள் போர் அனர்த்­தத்­தில் ஏற்­பட்ட சொத்­த­ழி­வுக்கு இழப்­பீடு கோரி பிர­தேச செய­ல­கம் ஊடாக புனர்­வாழ்வு அமைச்­சுக்கு விண்­ணப்­பித்­தி­ருந்­த­னர். விண்­ணப்­பித்­த­வர் க­ளுக்கு அமைச்சால் இலக்­கம் வழங்­கப்­பட்டு தொடர் இலக்­கம் மூலம் இழப்­பீட்­டுக் கொடுப்­ப­னவு வழங்­கப்­ப­டு­மென அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்த நிலையில் கடந்த அரச தலை­வர் தேர்­த­லுக்கு முன்­னர் கிளி­நொச்­சி­யில் வைத்து அப்­போ­தைய அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச­வால் ஒரு தொகு­தி­யி­ன­ருக்கு இழப்­பீட்­டுக் கொடுப்­ப­னவு வழங்­கப்­பட்­டது.

அதன்­பின்­னர் கொடுப்­ப­ன­வு­கள் வழங்­கப்­ப­ட­வில்லை. இந்­த­ நி­லை­யில் இழப்­பீடு வழங்­கா­த­வர்­க­ளின் பெயர் விவ­ரங் களை அறிந்­துள்ள சிலரே மக்­களை இவ்­வாறு ஏமாற்றிப் பணம் பறித்து வரு­ கின்­ற­னர் என விசனம் தெரிவிக்கப்பட்டது.