யாழ். மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் இம்மாதம் 8ஆம் திகதியில் இருந்து 14ஆம் திகதி வரை தேசிய நல்லிணக்க வாரமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், நாட்டின் பல்வகைத்தன்மையை ஏற்று இலங்கையர் என்ற வகையில் அனைவரும் ஒருமித்து வாழக்கூடிய சூழலை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் யாழ். மாவட்ட செயலக அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

யாழ். மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.</p> </div>