வடமராட்சி பகுதியில் மின்ஒழுக்கு காரணமாக வீடொன்று முற்றாக எரிந்து நாசம்!!

வடமராட்சி பகுதியில் மின்ஒழுக்கு காரணமாக வீடொன்று முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.

வடமராட்சி கலட்டி பகுதியிலுள்ள வீடொன்றே இன்று மாலை 4.30 அளவில் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த வீட்டு உரிமையாளர்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் வசிப்பதாகவும், வீட்டில் குடியிருந்த வீதி ஒப்பந்தக்காரர் ஒருவர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு, இந்த வீட்டில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அதன்பின் ஆளரவற்ற வீடாக இருந்த நிலையிலேயே, இன்று மின் ஒழுக்கு காரணமாக தீப்பற்றி எரிந்துள்ளது.

மின்சாரசபையினர், பொலிசார், உள்ளூர் பொதுமக்கள் இணைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.