யாழ் கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

தென்மராட்சிப் பகுதி கடற்தொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என சாவகச்சேரி பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

இவ் அறிவிப்பை சாவகச்சேரி பிரதேச செயலக இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

வட இலங்கைக்கு அப்பால் 200 கிலோ மீற்றருக்கு அப்பால் நிலை கொண்டுள்ள புயல் இன்று இரவு தென்மராட்சி கரையோரப் பகுதிகளில் வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதி மீனவர்கள் பாதுகாப்புக் காரணமாக தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மராட்சி கரையோரப் பகுதிகளில் வீசக்கூடும் என எதிர்பார்கப் படும் காற்று யாழ் மாவட்டத்தின் ஏனைய கரையோரங்களிலும் தாக்கம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.