சாவகச்சேரியில் தேக்குமரம் கடத்தியவர்களுக்கு நடந்த கதி!!

சாவகச்சேரி பெருங்குளம் பகுதியில் இருந்து உழவு இயந்திரம் மூலம் பெறுமதியான ஒன்பது தேக்குமரக்குற்றிகளை கடத்த முற்பட்ட நபரை கைது செய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான உழவு இயந்திர சாரதி சங்கத்தாணை பகுதியினை சேர்ந்தவர் என பொலிஸார் கூறினர்.

சாவகச்சேரி பொலிஸ் நிலைய துர்நடத்தை தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையின் இம் மரக்குற்றி கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி உழவு இயந்திர சாரதி அனுமதிபத்திரம் எதுவும் இன்றி மரக்காளை ஒன்றிற்கு கடத்த முற்பட்டுள்ளார்.

கைதான நபரையும் பறிமுதல் செய்யப்பட்ட தேக்குமரக்குற்றிகளையும் சாவகச்சேரி நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.