ஷில்பாவாக மாறிய விஜய் சேதுபதி

தியாகராஜன் குமார்ராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் பெண் வேடத்தில் நடிக்கிறார்.

ஆரண்ய காண்டம் திரைப்படத்தை இயக்கிய தியாகராஜன் குமார்ராஜா இயக்கும் அநீதி கதைகள் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் விஜய் சேதுபதி பெண் வேடமிட்டுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

விஜய் சேதுபதியுடன் மலையாள நடிகர் ஃபகத் பாசில், சமந்தா மற்றும் காயத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆரண்ய காண்டம் படத்தில் அதிகளவில் புதுமையை புகுத்தி இருப்பார் யுவன்.

பல்வேறு வேடங்களிலும், கஷ்டமான கதாபாத்திரத்தையும் அசால்ட்டாக நடித்து வரும் விஜய் சேதுபதி முதல்முறையாக பெண் வேடத்தில் நடிக்கிறார். இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.