11. 09. 2017 இன்றைய இராசிப் பலன்

மேஷம்

இன்றும் மாலை மணி 4.48 வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் அதிகாரிகள் உங்களை அங்கீகரிப்பார்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

ரிஷபம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். மாலை மணி 4. 48 முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அலைச்சல் அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

மிதுனம்

எதிலும் வெற்றி பெறுவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

கடகம்

எந்தப் பிரச்னைகளையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

சிம்மம்

உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

கன்னி

இன்றும் மாலை மணி 4.48 வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

துலாம்

குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வேற்றுமதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். பழைய சொந்தங்கள் தேடி வரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மாலை 4.48 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்வீர்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

விருச்சிகம்

உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

தனுசு

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். வியாபாரததில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

மகரம்

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நவீன சாதனங்கள் வாங்குவர்கள். சகோதரி உதவுவார். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

கும்பம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

மீனம்

இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். அழகு, இளமைக் கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை