பளையில் கொழும்பு பஸ் மோதி ஒருவர் படுகாயம்

பளைப் பகுதியில் யாழில் இருந்து கொழும்பு சென்ற பஸ் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பளை முல்லையடிப் பகுதியில் நேற்று  இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

படுகாயமடைந்த நபர் பஸ் ஒன்றில் இருந்து இறங்கி தனது வீட்டுக்குச் செல்ல முற்பட்ட போது யாழில் இருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த பஸ் மோதியுள்ளது.

இதனால் படுகாயமடைந்த நபர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.