மன்னார்ப் பகுதி கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டிவை!

மன்னார்ப் பகுதி கடற்றொழிலாளர்கள் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.

தற்போது மீண்டும் அவர்கள் கடந்த 25ம் திகதி கடலில் வைத்து தாக்குதலுக்கு உட்பட்டுள்ளனர்.

இச் சம்பவங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. இச் சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.ப.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லைத் தாண்டியதும், தடைசெயய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான கடற்றொழில் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள எமது கடற்றொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக்கொள்ள முயற்சிக்கும்போது வேறு பகுதி சார்ந்த கடற்றொழிலாளர்களின் ஊடுறுவல்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், தொழில் செய்கின்ற சந்தர்ப்பங்களில் தாக்குதல்களுக்கும் உட்படுவதானது மிகவும் துரதிஸ்டவசமான நிகழ்வாகும்.

எனவே, இத் தாக்குதல்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் நிகழாத வகையில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.