கிளிநொச்சியில் காவாலிகளுக்கிடையில் கடும் மோதல்!! மோட்டார் சைக்கிள் தீ வைப்பு

கிளிநொச்சியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வாள்வெட்டு

தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் உள்ள

பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலின் போது தாக்குதலுக்கு இலக்கான நபரின் மோட்டார் சைக்கிள் தீ

வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.